Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வேண்டுமென்றே பயணிகள் விமானத்தைக் கடலில் மூழ்கடித்த அதிகாரிகள்!

துருக்கியில் பயன்படுத்தப்படாத ஏர்பஸ் A330ரக பயணிகள் விமானத்தை வேண்டுமென்றே கடலில் மூழ்கடித்துள்ளனர் அந்நாட்டு அதிகாரிகள்.

வாசிப்புநேரம் -

துருக்கியில் பயன்படுத்தப்படாத ஏர்பஸ் A330ரக பயணிகள் விமானத்தை வேண்டுமென்றே கடலில் மூழ்கடித்துள்ளனர் அந்நாட்டு அதிகாரிகள்.

துருக்கியின் வடமேற்குப் பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக அதிகாரிகள் அவ்வாறு செய்துள்ளனர்.

முக்குளிப்பாளர்களை ஈர்க்க ஏகன் (Aegean)கடலில் 30 மீட்டர் ஆழத்தில் 65 மீட்டர் நீள விமானத்தை அவர்கள் மூழ்கடித்தனர்.

அவ்வாறு செய்ததன்மூலம் முக்குளிப்பாளர்கள் அங்கு அதிகமான எண்ணிக்கையில் வர வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

எதிர்காலத்தில் முக்குளிப்பாளர்களின் கனவுக்கோட்டையாகக்கூட இந்த இடம் மாறலாம் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்