Images
  • Twins Marriage
    ( படம்: Facebook/Briana Deane )

இரட்டையர்கள் தலைமையில் இரட்டையர்களுக்குத் திருமணம்

அமெரிக்காவின் ஒஹயோ மாநிலத்தில் உள்ள டிவின்ஸ்பர்க் நகரில் வித்தியாசமான ஒரு திருமணம்.

கடந்த வாரம் அந்தப் பகுதியில் இரட்டையர்கள் தினம் கொண்டாப்பட்டது, அப்போது ஸ்லெயர்ஸ் ( Slayers ) சகோதரர்கள் டியேன் ( Deane) சகோதரிகளை மணமுடித்தனர்.

இரட்டையர்களின் திருமணத்தை நடத்திவைத்த திருமணப் பதிவாளர்களும் இரட்டையர்களே. திருமணத்தைக் காண அந்தப் பகுதியிலிருந்து பல இரட்டையர்கள் வந்திருந்தனர்.

திருமணத்திற்குப் பிறகும் ஒரே வீட்டில் இருக்கப்போவதாகவும், தங்கள் குழந்தைகளை ஒரே வீட்டில் வளர்க்கப்போவதாகவும் ஸ்லெயர்ஸ் சகோதரர்கள் தெரிவித்தனர்.

Top