Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பயனீட்டாளர்களின் விவரங்கள் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும்: Twitter

Twitter சமூகத் தளப் பயனீட்டாளர்களின் விவரங்கள், விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
பயனீட்டாளர்களின் விவரங்கள் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும்: Twitter

படம்: Alastair Paik/AFP

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

Twitter சமூகத் தளப் பயனீட்டாளர்களின் விவரங்கள், விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய மின்-அஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்களைப் பயனீட்டாளர்கள் பதிவுசெய்வது வழக்கம்.

அந்த விவரங்கள் தவறுதலாக விளம்பரங்களுக்கு உபயோகிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

அந்தப் பிரச்சினை கடந்த மாதம் 17ஆம் தேதியன்று சரிசெய்யப்பட்டு விட்டதாக Twitter தெரிவித்தது. இருப்பினும் எத்தனை பயனீட்டாளர்கள் அதனால் பாதிக்கப்பட்டனர் என்பதை Twitter குறிப்பிடவில்லை.

ஏற்பட்ட தவறுக்கு Twitter நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்