Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Twitter நிறுவனத் தலைமை நிர்வாகியின் முதல் பதிவு சுமார் 3 மில்லியன் டாலருக்கு விற்பனை

Twitter நிறுவனத் தலைமை நிர்வாகி ஜேக் டோர்சியின் (Jack Dorsey), முதல் பதிவு, 2.9 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

Twitter நிறுவனத் தலைமை நிர்வாகி ஜேக் டோர்சியின் (Jack Dorsey), முதல் பதிவு, 2.9 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

அவர், 2006 மார்ச் 21-ஆம் தேதி, "just setting up my twttr" என்று முதல்முறை பதிவிட்டார்.

அந்தப் பதிவு, Valuables @Cent எனும் இணையத்தளத்தில் ஏலம் விடப்பட்டது.

மலேசியாவைச் சேர்ந்த சினா ஏஸ்தேவி ( Sina Estavi) என்ற ஆடவர் அதை வாங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.

Twitter பதிவு ஏலத்தொகையில் 95 விழுக்காடு, டோர்சிக்குச் செல்லும் என்று நம்பப்படுகிறது.

அது ஆப்பிரிக்காவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு நன்கொடையாகக் கொடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

எஞ்சிய தொகை, Cent நிறுவனத்திற்கு செல்லும்.

அண்மைக்காலமாக, Twitter பதிவுகள் உள்ளிட்ட இணையப் பொருள்களின் விற்பனை அதிகரித்துவருகிறது.

இணையப் பொருள்களை வாங்கும்போது, வாடிக்கையாளர்கள், தனித்துவமான மின்னிலக்கச் சான்றிதழைப் பெறுகின்றனர்.

உரிமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்படும் அந்தச் சான்றிதழ் சற்று வித்தியாசமாக அமைகிறது.

அந்தக் கையொப்பம் உண்மை என்று உறுதிசெய்வதற்கு, அது பொதுமக்களின் பார்வையில் வைக்கப்படுகிறது.

-Reuters/ta 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்