கொள்கை மாற்றத்தால் Twitter கணக்குகளைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சரிவு
Twitter அதன் சேவையின் நம்பகத்தன்மையை அதிகரிக்க செய்த கொள்கை மாற்றங்களால் அதன் ஆகப் பிரபலமான 100 பயனீட்டாளர்கள் தங்களது Twitter கணக்குகளைப் பின்தொடர்பவர்களில் 2 விழுக்காட்டினரை இழந்தனர்.
Twitter அதன் சேவையின் நம்பகத்தன்மையை அதிகரிக்க செய்த கொள்கை மாற்றங்களால் அதன் ஆகப் பிரபலமான 100 பயனீட்டாளர்கள் தங்களது Twitter கணக்குகளைப் பின்தொடர்பவர்களில் 2 விழுக்காட்டினரை இழந்தனர்.
மோசடி சந்தேகத்தின் பேரில் Twitter சில கணக்குகளை முடக்கியுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகார் ஜாக் டோர்சே கூறினார்.
இவ்வாறு முடக்கப்படும் கணக்குகள் பின்தொடரும் கணக்குகளாகக் கருதப்பட மாட்டா.
கணக்குகளில் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகள் தென்பட்டோலோ நீண்ட காலத்திற்குப் பின் திடீரென்று அவை இயங்கத் தொடங்கினாலோ சந்தேகத்தின் பேரில் அவை முடக்கப்படும்.
Twitter போன்ற சமூக ஊடகங்களில் பிரபலம் அடைந்துள்ளவர்கள் விளம்பர நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
மேலும் பலருக்கு தங்கள் Twitter கணக்கைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒருவிதப் பெருமையை அளிக்கிறது.
மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டது Twitter நிறுவனத்தின் கணக்கு.
அதைப் பின்தொடர்பவர்களில் 12.4 விழுக்காட்டினரை நிறுவனம் இழந்தது.
பிரபல ஆங்கிலப் பாடகி கேட்டி பெர்ரி போன்றோரின் கணக்குகளைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 2.8 மில்லியனுக்கும் மேல் சரிந்தது.