Images
  • twitter hack
    (படம்: Hillsborough County Sheriff's Office via AP)

பிரபலங்களின் Twitter கணக்குகள் ஊடுருவல் - 17 வயது இளையர் மீது குற்றச்சாட்டு

பிரபலங்களின் Twitter கணக்குகள் ஊடுருவப்பட்டதன் பின்னணியில் 17 வயது இளையர் இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இலோன் மஸ்க் (Elon Musk), ஜோ பைடன் (Joe Biden) உள்ளிட்ட பிரபலங்களின் கணக்குகளை ஊடுருவுவதற்கு அமெரிக்காவின் புளோரிடா(Florida) மாநிலத்தைச் சேர்ந்த அவர் திட்டமிட்டதாக அதிகாரிகள் கூறினர்.

கிரஹம் கிளார்க் (Graham Clark) என்ற அந்த இளையர் மீது 30 மோசடிக் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டன.

கிளார்க் ஊடுருவப்பட்ட கணக்குகள் மூலம், மின்னிலக்க நாணய முதலீட்டை ஊக்குவிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

மோசடிகள் மூலம் 100,000 டாலருக்கும் அதிகமான தொகையை ஈட்டமுடிந்ததாக அதிகாரிகள் கூறினர்.

கிளார்க்கின் செயல்களுக்குத் துணைபுரிந்ததாக புளோரிடாவைச் சேர்ந்த 22 வயது நிமா ஃபாஸேலி (Nima Fazeli) மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அத்துடன், 19 வயது பிரிட்டிஷ் ஆடவர் மேசன் ஷேப்பர்ட் (Mason Sheppard) மீது தொழில்நுட்ப மோசடியில் ஈடுபட்டதாகவும் கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

Top