Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

@POTUS - அமெரிக்க அதிபருக்குரிய கணக்கை பைடனுக்கு மாற்றவிருக்கும் Twitter

அதிபர் டோனல்ட் டிரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்ததாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும், Twitter நிறுவனம் அதன் @POTUS என்ற அமெரிக்க அதிபருக்கான அதிகாரத்துவக் கணக்கைத் தேர்தல் வெற்றியாளர் திரு ஜோ பைடனுக்குத் அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
@POTUS - அமெரிக்க அதிபருக்குரிய கணக்கை பைடனுக்கு மாற்றவிருக்கும் Twitter

(படம்: AP Photo/Evan Vucci)

அதிபர் டோனல்ட் டிரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்ததாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும், Twitter நிறுவனம் அதன் @POTUS என்ற அமெரிக்க அதிபருக்கான அதிகாரத்துவக் கணக்கைத் தேர்தல் வெற்றியாளர் திரு ஜோ பைடனுக்குத் அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதியன்று பதவியேற்றவுடன் கணக்கு திரு பைடனிடம் ஒப்படைக்கப்படும் என்றது Twitter.

கணக்குக்குத் தற்போது சொந்தக்காரர் திரு டிரம்ப். கணக்கு திரு பைடனைச் சேரும்போது, திரு டிரம்ப்பின் அனைத்துப் பதிவுகளும் காப்பகத்துக்குச் செல்லும்.

அப்போது கணக்கில் எந்தப் பதிவும் இருக்காது.

திரு டிரம்ப் பொதுவாக அரசியல் சார்ந்த விவகாரங்களைத் தமது சொந்த Twitter கணக்கான @realDonaldTrump-இல் பதிவு செய்வார். அதன் பின், அதனை அதிபருக்கான கணக்கில் பகிர்ந்துகொள்வார்.

திரு டிரம்ப்பின் Twitter கணக்கில் 88 மில்லியன் பேர் சேர்ந்துள்ளனர்; அதிபருக்கான கணக்கில் 32 மில்லியன் பேர் இணைந்துள்ளனர்.

திரு பைடனின் சொந்தக் கணக்கை அதைவிடக் குறைவாக 19 மில்லியன் பேர் மட்டுமே பின்தொடர்கின்றனர்.

திரு டிரம்ப் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 88,000 டுவிட்டர் பதிவுகளைச் செய்திருக்கிறார்.

திரு பைடன் செய்த பதிவுகள் 7,000 மட்டுமே.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்