Images
  • twitter
    (படம்:Reuters/Thomas White)

அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு ஆதரவாகச் செயல்படுத்தப்பட்ட கறுப்பினத்தவர் போலிக் கணக்குகள் நீக்கம் - Twitter

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதுவதோடு அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு ஆதரவளிப்பதாகக் பதிவிடப்பட்ட போலிக் கணக்குகளை Twitter நிறுவனம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.

அது குறித்து CNN செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், போலிக் கணக்குகளில் "ஆம், நான் கறுப்பினத்தைச் சேர்ந்தவர். நான் டிரம்ப்புக்கு வாக்களிக்கிறேன்." என்ற ஒரே வாசகங்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக Twitter சொன்னது.

செயற்கையான வழியில் பதிவுகளை மிகைப்படுத்துவது, அடக்குமுறை ஆகியவை தொடர்பான விதிகளை அந்தக் கணக்குகள் மீறியதாக CNN கூறியது.

Twitter கணக்குகளை உருவாக்கியது யார்? எத்தனை போலிக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

போலிக் கணக்குகளின் பின்னணியில் வெளிநாட்டு அரசாங்கங்களுக்குத் தொடர்பிருப்பதாகத் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட நாடுகளின் அடையாளம் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.

Top