Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தென் கொரியாவை அலைக்கழித்து வரும் லிங்லிங் சூறாவளி - 17,000 வீடுகளில் மின்தடை

தென் கொரியாவை அலைக்கழித்து வரும் லிங்லிங் சூறாவளி காரணமாக சுமார் 17,000 வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தென் கொரியாவை அலைக்கழித்து வரும் லிங்லிங் சூறாவளி - 17,000 வீடுகளில் மின்தடை

(படம்: AFP / YONHAP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தென் கொரியாவை அலைக்கழித்து வரும் லிங்லிங் சூறாவளி காரணமாக சுமார் 17,000 வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

இன்று காலை, குன்சான் என்ற பகுதியில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் லிங்லிங் சூறாவளி வீசியது.

பலத்த காற்றாலும் கடும் மழையாலும் மரங்களும் தெரு விளக்குகளும் சாய்ந்தன.

இன்று மாலை வடகொரியாவின் Hwanghae பகுதியை அது தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் ஜேஜு (Jeju) அனைத்துலக விமான நிலையம் சூறாவளி காரணமாக அனைத்து விமானச் சேவைகளையும் ரத்து செய்தது.

ஜேஜுவுக்கும் தென் கொரியாவின் இதர பகுதிகளுக்கும் இடையே சென்று வரும் படகுச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.

பள்ளிகளும் பல சுற்றுலாத் தலங்களும் தற்போது மூடப்பட்டுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்