Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மத்திய கிழக்கு வட்டாரத்துக்குப் புதிய விடியல் பிறக்கும்: அமெரிக்க அதிபர்

ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், பஹ்ரைன் (Bahrain) ஆகியவற்றுடன் இஸ்ரேல் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மூலம், மத்திய கிழக்கு வட்டாரத்துக்குப் புதிய விடியல் பிறக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புகழ்ந்துரைத்துள்ளார்.

வாசிப்புநேரம் -

ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், பஹ்ரைன் (Bahrain) ஆகியவற்றுடன் இஸ்ரேல் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மூலம், மத்திய கிழக்கு வட்டாரத்துக்குப் புதிய விடியல் பிறக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புகழ்ந்துரைத்துள்ளார்.

அந்த வளைகுடா நாடுகள் இரண்டும் இஸ்ரேலுடனான உறவை முழுமையாக வழக்கத்துக்குகொண்டுவரும் வகையில் உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளன.

Abraham Accords எனப்படும் அந்த அமைதி ஒப்பந்தங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளன.

கடந்த பல ஆண்டுகளாகப் பெரும்பாலான அரபு நாடுகள் இஸ்ரேலைப் புறக்கணித்துவந்தன.

இஸ்ரேல்-பாலஸ்தீனச் சர்ச்சைக்குத் தீர்வுகண்ட பிறகே இஸ்ரேலுடன் உறவு-பூண முடியும் என்று அவை வலியுறுத்தின.

அண்மை உடன்பாட்டின் கீழ், மேற்குக் கரைப் பகுதிகளைத் தன்னுடன் இணைத்துக்கொள்ளும் திட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட இஸ்ரேல் இணங்கியுள்ளது.

ஆனால் உடன்படிக்கை கையெழுத்தான நாள், மத்திய கிழக்கு வட்டாரத்துக்குக் கறுப்பு-தினம் என்று பாலஸ்தீனத் தலைமைத்துவம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதில் கையெழுத்திட்ட பஹ்ரைன், பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிக்கப்படுவதே சர்ச்சைக்குச் சிறந்த தீர்வு என்று வலியுறுத்தியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்