Images
  • UAE women equal representation (1)
    (படம்: AFP)

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் ஆலோசனை மன்றத்தில் பெண்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம்

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் ஆலோசனை மன்றத்தில் பெண்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு புதுபிக்கப்படவிருக்கும் ஆலோசனை மன்ற உறுப்பினர்களில் ஐம்பது விழுக்காட்டினர் பெண்களாக இருக்கவேண்டும் என்று ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸயீது அல்-நஹ்யான் (Sheikh Khalifa Bin Zayed Al-Nahyan) கூறினார்.

பொது விவகாரங்களிலும் அரசாங்க வரவு செலவு திட்டங்களிலும் ஆலோசனை மன்றத்தின் உறுப்பினராகவுள்ள பெண்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

இருப்பினும் அமைச்சரவை குறித்தும் அமைச்சர்கள் குறித்தும் அவர்கள் எவ்வித முடிவையும் எடுக்க முடியாது.  

Top