Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மதுபோதையில் இருக்கும் பயணிகளை அடையாளம் காணும் Uber தொழில்நுட்பம்

Uber மதுபோதையில் இருக்கும் பயணிகளை அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்குக் காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளது.

வாசிப்புநேரம் -
மதுபோதையில் இருக்கும் பயணிகளை அடையாளம் காணும் Uber தொழில்நுட்பம்

(படம்: Pixabay)


Uber மதுபோதையில் இருக்கும் பயணிகளை அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்குக் காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளது.

பயணிகள் கைத்தொலைபேசியில் எவ்வளவு சரியாகத் தட்டச்சு செய்கிறார்கள், அவர்களின் கைபேசிகளை எப்படி பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் போன்றவற்றைக் கொண்டு புதுத் தொழில்நுட்பம் அவர்கள் எந்த அளவு மதுபோதையில் இருக்கிறார்கள் என்பதைக் கணிக்கும்.

மதுபோதையின் தாக்கத்தில் இருக்கும் பயணிகளைத் தங்கள் வாகனத்தில் ஏற்றிச் செல்ல விரும்பாத ஓட்டுநர்களுக்கு உதவுவது புதுத் தொழில்நுட்பத்தின் நோக்கம்.

ஆனால் புதுத் தொழில்நுட்பத்தை ஓட்டுநர்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதிக மதுபோதையில் இருக்கும் பயணிகளிடமிருந்து பணம் திருடும் அல்லது பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன் ஓட்டுநர்கள் அவர்களைக் குறிவைக்கக்கூடும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

புதுத் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமைக்கு விண்ணப்பம் செய்தாலும் அது உண்மையில் அறிமுகமாகுமா என்பதை Uber உறுதிப்படுத்தவில்லை.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்