Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இங்கிலாந்து ஓட்டுநர்களுக்கு ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் Uber

இங்கிலாந்தில், Uber நிறுவனம்,வாகனச்சேவை ஓட்டுநர்களுக்கு ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.

வாசிப்புநேரம் -
இங்கிலாந்து ஓட்டுநர்களுக்கு ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் Uber

(படம்: REUTERS/Phil Noble)

இங்கிலாந்தில், Uber நிறுவனம்,வாகனச்சேவை ஓட்டுநர்களுக்கு ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.

பிரிட்டனில் தகுதிபெறும் அனைத்து ஓட்டுநர்களுக்கும்
Uber தனது ஓய்வூதியத் திட்டத்தை வழங்கப் போவதாகக் கூறியது.

மார்ச் மாதம் பிரிட்டனில் உள்ள 70,000க்கும் மேற்பட்ட
ஓட்டுநர்களை, நிறுவனம், 'தொழிலாளிகள்' என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தியது.

அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஊழியர்களை வகைப்படுத்த வெளியிட்ட தீர்ப்பைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Uber நிறுவனம் விடுமுறை ஊதியம், ஓய்வூதியத் திட்டம், வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் ஆகிய உரிமைகளை ஓட்டுநர்களுக்கு வழங்கப் போவதாகக் தெரிவித்தது.

ஓட்டுநரின் வருமானத்தில் 3 விழுக்காடு ஓய்வூதியத் திட்டத்திற்குச் செல்லும்.

ஓட்டுநர்கள் தங்கள் வருமானத்திலிருந்து 5 விழுக்காட்டை திட்டத்திற்கு வழங்கலாம்.

புகழ்பெற்ற மற்ற வாகனச்சேவை நிறுவனங்களும் தங்கள் ஓட்டுநர்களுக்கு இது போன்ற சலுகைகளை வழங்கவேண்டும் என்று Uber கேட்டுக்கொண்டது.







விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்