Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'மருத்துவப் பொருள்களுக்காக, சீனாவைச் சார்ந்திருக்கக்கூடாது': பிரிட்டிஷ் பிரதமர்

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், மருத்துவப் பொருள்களுக்காக சீனாவைச் சார்ந்திருக்கும் போக்கை முடிவுக்குக் கொண்டுவருமாறு  அரசாங்க அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். 

வாசிப்புநேரம் -
'மருத்துவப் பொருள்களுக்காக, சீனாவைச் சார்ந்திருக்கக்கூடாது': பிரிட்டிஷ் பிரதமர்

(படம்: Reuters/Hannah Mckay)

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், மருத்துவப் பொருள்களுக்காக சீனாவைச் சார்ந்திருக்கும் போக்கை முடிவுக்குக் கொண்டுவருமாறு அரசாங்க அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதற்கு 'Project Defend' என்று திரு. ஜான்சன் பெயரிட்டிருப்பதாக The Times நாளேடு குறிப்பிட்டது. பொருளியல் ரீதியாக பிரிட்டனிடம் உள்ள முக்கியமான பலவீனங்களை அடையாளம் காண்பதும் அவற்றுள் ஒன்று.

அது, தேசியப் பாதுகாப்பை மேம்படுத்தும் அணுகுமுறையின் ஓர் அம்சம்.

உணவு சாரா அத்தியாவசியப் பொருள்களுக்காகத் தனி நாடுகளைச் சார்ந்திராமல் இறக்குமதியைப் பன்முனைப்படுத்த, 'Project Defend' வலியுறுத்துகிறது.

COVID-19 கொள்ளை நோயைக் கையாண்ட விதம் குறித்து, சீனா குறைகூறப்பட்டுவரும் நிலையில், பிரிட்டனின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்