Images
  • water fountain heat
    (படம்: AFP)

பிரிட்டனில் அளவுக்கதிகமான வெப்பம் - 2,500க்கும் அதிகமானோர் மரணம்

பிரிட்டனில் இந்த ஆண்டு கோடைக்காலத்தில் 2,500க்கும் அதிகமானோர் அளவுக்கதிகமான வெப்பத்தால் மாண்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கிருமிப் பரவல் மோசமடைந்திருந்த சூழலில், வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவ உதவியை நாடப் பொதுமக்கள் முன்வரவில்லை.

மருத்துவமனைகளில் தங்களுக்குக் கொரோனா கிருமி தொற்றக்கூடும் என்று அவர்கள் அஞ்சியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆண்டுக்கு ஆண்டு, வெப்பத்தால் மடிவோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அவர்கள் எச்சரித்தனர்.

Top