Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 காரணமாக அறிவிக்கப்பட்ட முடக்க நிலையைத் தளர்த்தத் திட்டமிடும் பிரிட்டன்

COVID-19 காரணமாக அறிவிக்கப்பட்ட முடக்க நிலையைத் தளர்த்தத் திட்டமிடும் பிரிட்டன்

வாசிப்புநேரம் -

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டில் COVID-19 காரணமாக அறிவிக்கப்பட்ட முடக்க நிலையைத் தளர்த்தத் திட்டமிடுகிறார்.

அங்கு, தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருவது அதற்குக் காரணம்.

தற்போது பிரிட்டனில், பெரியவர்களில் மூன்றில் ஒருவருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 8ஆம் தேதி முதல், பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முடக்க நிலையைத் தளர்த்தும் முதல்படியாக, அது இருக்கக்கூடும்.

பள்ளிகள் திறக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு வெளிப்புறங்களில் 6 பேர்வரை ஒன்றுகூட அனுமதிக்கப்படலாம்.

ஆனால், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் , இசை மதுக்கூடங்கள், முடி திருத்தகங்கள் வரும் ஏப்ரல் மாத இறுதிவரை மூடப்பட்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்கத்தில், நோய்ப்பரவல் குறித்து திரு. ஜான்சன் தெளிவான அணுகுமுறையைப் பின்பற்றவில்லை என்று குறைகூறப்பட்டது.

அதனால், அவர் தற்போது கவனமாய் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

COVID-19 நோய்ப்பரவலால், ஆக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரிட்டனும் ஒன்று.

அங்கு, 120,000-க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.

பிரிட்டனில் அடையாளம் காணப்பட்ட புதுவகைக் கொரோனா கிருமியால் பாதிப்பு கடுமையானது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்