Images
  • uk covid (1)
    (படம்: Victoria Jones/PA via AP)

பிரிட்டன்: முடக்கநிலையைத் தளர்த்தும் திட்டங்கள் ஒத்திவைப்பு

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்தில் நடப்பில் உள்ள முடக்கநிலையைத் தளர்த்தும் திட்டங்களை ஒத்திவைத்துள்ளார்.

அங்கு COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதே அதற்குக் காரணம்.

சூதாட்டக்கூடங்கள், உருட்டுப் பந்து விளையாட்டுக் கூடங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

திருமண உபசரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தவும் அனுமதி இல்லை.

வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் அரசாங்கம் முடக்கநிலை தொடர்பான கட்டுப்பாடுகளை அவசரமாக மீண்டும் செயல்படுத்தியதைத் தொடர்ந்து, புதிய அறிவிப்பு வந்துள்ளது. 

Top