Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தனிமைப்படுத்துதல், முகக்கவசம் அணிதல் - பிரிட்டனில் புதிய கட்டுப்பாடுகள்

பிரிட்டன் புதிய ஒமிக்ரான் (Omicron) வகைக் கிருமியின் பரவலைத் தடுப்பதற்கு COVID-19 கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
தனிமைப்படுத்துதல், முகக்கவசம் அணிதல் - பிரிட்டனில் புதிய கட்டுப்பாடுகள்

(படம்: AFP/Hollie Adams)

பிரிட்டன் புதிய ஒமிக்ரான் (Omicron) வகைக் கிருமியின் பரவலைத் தடுப்பதற்கு COVID-19 கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது.

அந்நாட்டிற்குள் நுழையும் அனைத்துப் பயணிகளும் இனி தங்களைச் சுயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.

அவர்கள் PCR பரிசோதனையில் கிருமித்தொற்று இல்லை என்ற முடிவை முதலில் பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் சில ஆப்பிரிக்க நாடுகள் மீதான எல்லைக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.

மலாவி (Malawi), மொஸாம்பிக் (Mozambique), ஸாம்பியா (Zambia), அங்கோலா(Angola) ஆகிய நாடுகளிலிருந்து வருவோர் இனி 10 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்.

பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் கடைகளிலும் முகக்கவசம் அணியும் நடைமுறை கட்டாயமாக்கப்படும்.

"ஒமிக்ரான் கிருமி குறித்துத் தகவல் சேகரிப்பதற்கு, நாம் ஆராய்ச்சியாளர்களுக்குக் கூடுதல் அவகாசத்தை வழங்கவேண்டும்," என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.

இந்நிலையில், Booster அதாவது கூடுதல் தடுப்பூசி போடும் பணிகளைத் துரிதப்படுத்தவேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

பிரிட்டனில் இரண்டு பேரிடம் ஒமிக்ரான் கிருமி அடையாளம் காணப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்