Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மற்றொரு முடக்கநிலையை அறிவிப்பதற்கான தேவை ஏதுமில்லை: பிரிட்டிஷ் பிரதமர்

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson), மற்றொரு முடக்கநிலையை அறிவிப்பதற்கான தேவை ஏதும் தற்போது எழவில்லை என்று கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson), மற்றொரு முடக்கநிலையை அறிவிப்பதற்கான தேவை ஏதும் தற்போது எழவில்லை என்று கூறியுள்ளார்.

நோய்ப்பரவல் அதிகரித்து வரும் வேளையில், கட்டுப்பாடுகளை முன்கூட்டியே செயல்படுத்துவது சிறந்தது என்று ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.

நேற்று முன்தினம் மட்டும் அங்கு புதிதாக 52,000 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

கோடைக்காலத்தில் இங்கிலாந்தின் COVID-19 கட்டுப்பாடுகளைப் பிரதமர் ஜான்சன் தளர்த்தினார்.

முகக்கவசம் அணிவதற்கான விதிமுறை அப்போது நீக்கப்பட்டது.

ஆனால் முழுமையாக மூடப்பட்ட இடங்களிலும், குறிப்பாக அந்நியர்களைச் சந்திக்கும் போதும் முகக்கவசம் அணியவேண்டும்.

நோய்த்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமில்லை என்றார் திரு. ஜான்சன்.

தற்போது அதிகரிக்கும் நோய்த்தொற்றுக்கு, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதே காரணம் என்று கூறப்படுகிறது.

அண்மை வாரத்தில்மட்டும், சுமார் 7.8 விழுக்காட்டுச் சிறுவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மாணவர்கள் பள்ளித் தடுப்பூசி திட்டம், தடுப்பூசி நிலையங்கள் ஆகியவற்றின் மூலம், முழு நம்பிக்கையுடன், தடுப்புமருந்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று பிரதமர் ஜான்சன் வலியுறுத்தினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்