Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பெரும்பாலான பதின்ம வயதினருக்கு COVID-19 தடுப்பூசி போடவேண்டாம்: பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு

பெரும்பாலான பதின்ம வயதினருக்கு COVID-19 தடுப்பூசி போடவேண்டாம்: பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு

வாசிப்புநேரம் -

பிரிட்டிஷ் அரசாங்கம், பெரும்பாலான பிள்ளைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் COVID-19 தடுப்பூசி போடவேண்டாம் என முடிவெடுத்திருக்கிறது.

இப்போது கிடைக்கும் தடுப்புமருந்துகள் குறித்து, அதிகத் தகவல்கள் கிடைக்கும்வரை காத்திருக்கப் போவதாக, பிரிட்டன் குறிப்பிட்டது.

கடுமையான நரம்புக் குறைபாடு, நோய் எதிர்ப்புச் சக்தியின்மை, கற்றல் குறைபாடு-ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகள் மட்டும் Pfizer-BioNTech தடுப்புமருந்துக்குத் தகுதி பெறுவதாக, பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்தது.

நிபுணர் ஆலோசனைக் குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தடுப்பூசி போடவேண்டாம் என்னும் முடிவு எடுக்கப்பட்டது.

அந்தப் பிரிவினர், மிக லேசான பாதிப்புக்கே ஆளாவதாகக் குழு குறிப்பிட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்