Images
  • hk (1)
    (கோப்புப் படம்: REUTERS/Tyrone Siu)

ஹாங்காங்கிலிருந்து வருவோருக்கு உதவ 59 மில்லியன் டாலரை ஒதுக்கும் பிரிட்டன்

ஹாங்காங்கிலிருந்து வருவோருக்கு வேலை, வீடு, பள்ளி ஆகியவற்றைத் தேடித் தருவதில் உதவ பிரிட்டன் 59 மில்லியன் டாலரை ஒதுக்கவுள்ளது.

ஹாங்காங்கில் சீனா புதிய பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறுவோருக்கு இடமளிக்க பிரிட்டன் முன்னர் உறுதியளித்திருந்தது.

அதன்படி 5 மில்லியனுக்கும் மேற்பட்டோரைப் பிரிட்டன் வரவேற்கக்கூடும்.

அங்கு அவர்கள் தங்கி, வேலை செய்து, பின்னர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும்.

ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பகுதி, ஆங்கில மொழி ஆதரவுக்கும் வீட்டுச் செலவுக்கும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பள்ளிகளுக்கும் சுகாதாரப் பராமரிப்புக்கும் பதிவு செய்ய உதவ, 12 இணையவழி வட்டார அலுவலகங்களும் தொடங்கப்படும்.

பிரிட்டனில் எவ்வாறு தொழில் தொடங்குவது என்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்படும்.

- Reuters/vc 

Top