Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உக்ரேன் விவகாரம் குறித்து உடனடிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin), உக்ரேன் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடனும் நேட்டோக் கூட்டணியுடனும் உடனடிப் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
உக்ரேன் விவகாரம் குறித்து உடனடிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு

(படம்: AFP/Anatolii Stepanov)

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin), உக்ரேன் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடனும் நேட்டோக் கூட்டணியுடனும் உடனடிப் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்யா உக்ரேன் மீது படையெடுக்கவிருப்பதாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குற்றஞ்சாட்டியுள்ளன.

உக்ரேன் எல்லைகளுக்கு அருகே ஆயிரக்கணக்கான ரஷ்யத் துருப்பினர் குவிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்து அவ்வாறு கூறப்படுகிறது.

திரு.புட்டின் படையெடுப்பை மறுத்துள்ளார்.

நாட்டின் தற்காப்புக்காக மட்டுமே ரஷ்யத் துருப்புகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகள் எந்தத் தாமதமும் இன்றித் தொடங்கவேண்டும் என்று திரு.புட்டின் தெரிவித்தார்.

நேட்டோக் கூட்டணி கிழக்கே விரிவடையக்கூடாது என்றும் உக்ரேன் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது என்றும் சட்ட ரீதியான உத்தரவாதங்கள் கொடுக்கப்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்