Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வீழ்த்தப்பட்ட விமானத்தில் மாண்ட 11 உக்ரேனியர்களின் சடலங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

உக்ரேனியப் பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்டபோது மாண்ட 11 உக்ரேனியர்களின் சடலங்கள் அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
வீழ்த்தப்பட்ட விமானத்தில் மாண்ட 11 உக்ரேனியர்களின் சடலங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

(படம்: REUTERS/Gleb Garanich)

உக்ரேனியப் பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்டபோது மாண்ட 11 உக்ரேனியர்களின் சடலங்கள் அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கியாவ் விமான நிலையத்தில் சென்று சேர்ந்த நல்லுடன் பேழைகளின் மீது அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelensky) முன்னிலையில் உக்ரேனியக் கொடி போர்த்தப்பட்டது.

இம்மாதம் 8-ஆம் தேதி, டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரேனிய விமானம் ஈரான் ஏவுகணைகளால் வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த 176 பேரும் மாண்டனர்.

விமானத்தில் இருந்த பெரும்பாலனோர் ஈரானைச் சேர்ந்தவர்கள். 57 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்