Images
  • global poor
    (படம்: AFP/Asif HASSAN)

'உலகில் 30 மில்லியனுக்கும் அதிகமானோர் பட்டினியால் வாடும் நிலையை நெருங்குகிறார்கள்'

உலகில் 30 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பட்டினியால் வாடும் நிலையை நெருங்கிக்கொண்டிருப்பதாக, ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.

பூசல், பருவநிலை நெருக்கடி, COVID-19 நோய்ப்பரவல் ஆகிய காரணங்களால் உலகில் பசியும், பட்டினியும் அதிகரிப்பதாக அது குறிப்பிட்டது.

அடுத்த சில மாதங்களில், 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பலர் கடுமையான பசியால் வாடக்கூடும் என்று நிறுவனம் எச்சரித்தது.

ஏமன், தெற்கு சுடான், வடக்கு நைஜீரியா ஆகிய பகுதிகளில் வசிப்போர் ஏற்கனவே பட்டினி கிடக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர்.

இம்மாதத் தொடக்கத்தில் ஐக்கிய நாட்டு நிறுவனம், உணவின்றித் தவிப்போருக்கு உதவ, 5.5 பில்லியன் டாலர் நன்கொடை கோரியிருந்தது.

Top