Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வட கொரிய அரசாங்கப் பிரதிநிதிகள் சிங்கப்பூருக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

ஐக்கிய நாட்டு நிறுவன பாதுகாப்பு மன்றம், வட கொரிய அரசாங்கப் பிரதிநிதிகள் சிங்கப்பூருக்கு வருவதற்கு அனுமதியளித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
வட கொரிய அரசாங்கப் பிரதிநிதிகள் சிங்கப்பூருக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

(படம்: AFP/Drew Angerer)

ஐக்கிய நாட்டு நிறுவன பாதுகாப்பு மன்றம், வட கொரிய அரசாங்கப் பிரதிநிதிகள் சிங்கப்பூருக்கு வருவதற்கு அனுமதியளித்துள்ளது.

ஆனால், எந்தெந்த அதிகாரிகள் இங்கு வரக்கூடும் என்பது பற்றி எந்த விவரமும் இல்லை.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அடுத்த மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் உச்சநிலைச் சந்திப்பை நடத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு ஏதுவாக, வட கொரியப் பிரதிதிகளுக்கான பயணத் தடையை நீக்க ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் அனுமதியளித்துள்ளது.

வட கொரியாவின் தனிப்பட்ட 80 பிரதிநிதிகளுக்கு ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றம் ஏற்கனவே பயணத் தடை விதித்திருந்தது.

முன்னதாக, வட கொரியா சில நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே, அந்நாட்டுத் தலைவருடனான உச்சநிலைச் சந்திப்பு சாத்தியமாகும் என்று அமெரிக்க அதிபர் கூறியிருந்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்