Images
  • UN Money
    (படம்: AFP/Don Emmert)

ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் பணப் பற்றாக்குறை?


ஐக்கிய நாட்டு நிறுவனம் இந்த மாத இறுதியில் பணப் பற்றாக்குறையைச் சந்திக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நிறுவனத் தலைமைச் செயலாளர் Antonio Guterres, நிறுவனத்தின் 37ஆயிரம் ஊழியர்களுக்கும் எழுதிய கடிதத்தில் அது குறித்து எச்சரித்துள்ளார்.

உலக நிறுவனம் தற்போது 230 மில்லியன் டாலர் பற்றாக்குறையை எதிர்நோக்குகிறது என்றார் அவர்.

உறுப்பு நாடுகள் வழக்கமான வரவு, செலவுகளில் 70 விழுக்காட்டிற்கு மட்டுமே பொறுப்பேற்பதை அவர் சுட்டினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பங்களிப்பை அதிகரிக்கும்படி உறுப்பு நாடுகளிடம் நிறுவனம் கேட்டுக்கொண்டது.

ஆனால் அவை ஏற்க மறுத்துவிட்டதாக உலக நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட இதர செலவுகளுக்காகக் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன.

மாநாடுகளையும், சந்திப்புகளையும் தள்ளிப்போடுவது, சேவைகளைக் குறைத்துக்கொள்வது போன்றவை அந்நடவடிக்கைகளில் அடங்கும்.

அமைதி நடவடிக்கைகளைத் தவிர்த்து மற்றவற்றுக்கு உலக நிறுவனம் கடந்த ஓராண்டில் ஒதுக்கிய தொகை சுமார் ஐந்தரை பில்லியன் டாலர்.

அதில் 22 விழுக்காட்டுத் தொகையை அமெரிக்கா வழங்குகிறது. 

Top