Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தடுப்பூசிகளை நன்கொடையாகக் கொடுத்தால் மட்டும் போதாது, கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டும்: ஐக்கிய நாட்டு நிறுவனம்

தடுப்பூசிகளை நன்கொடையாகக் கொடுத்தால் மட்டும் போதாது, கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டும்: ஐக்கிய நாட்டு நிறுவனம்

வாசிப்புநேரம் -
தடுப்பூசிகளை நன்கொடையாகக் கொடுத்தால் மட்டும் போதாது, கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டும்: ஐக்கிய நாட்டு நிறுவனம்

(கோப்புப் படம்: Michael Sohn/Pool via REUTERS)

COVID-19 நோய்ப்பரவலை முடிவுக்குக் கொண்டுவர, உலக நாடுகள், தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குவது மட்டுமல்லாமல் கூடுதலான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

வளரும் நாடுகளுக்கு G7 அமைப்பு 1 பில்லியன் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க முன்வந்திருப்பதை வரவேற்பதாக உலக நிறுவனம் தெரிவித்தது.

இருப்பினும் எவ்வளவு வேகமாகத் தடுப்பூசிகள் போடப்படுகின்றன என்பதைப் பொறுத்து நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் (Antonio Guterres) கூறினார்.

புதிய கொரோனா கிருமி வகைகள் உருவாகலாம். அவை தடுப்புமருந்துகளின் திறனை மட்டுப்படுத்தக்கூடும் என்பதை அவர் சுட்டினார்.

வளரும் நாடுகளில் இன்னும் கூடுதலானோருக்குத் தடுப்புமருந்து செலுத்த, விரிவான தடுப்பூசித் திட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும் என்றார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்