Images
  • UN Council
    (படம்: AFP)

ஐக்கிய நாட்டு மனித உரிமை மன்றத்தின் புதிய உறுப்பு நாடுகளைச் சாடும் மனித உரிமை ஆர்வலர் குழுக்கள்


ஐக்கிய நாட்டு மனித உரிமை மன்றம், புதிதாகத் தேர்ந்தெடுத்த 18 உறுப்பினர் குழுவில், கடுமையான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ள நாடுகளையும் சேர்த்துக்கொண்டிருப்பதாக, மனித உரிமை ஆர்வலர் குழுக்கள் குறைகூறியுள்ளன.

சர்ச்சைக்குரிய புதிய தெரிவுகளில், பஹ்ரைன், கேமரூன், பிலிப்பீன்ஸ் ஆகியவையும் அடங்கும்.

பிலிப்பீன்ஸில், போதைப் பொருளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில், சட்டத்துக்குப் புறம்பான வகையில் பலர் கொல்லப்பட்டனர் என்று ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.

எரித்ரியாவில், அதிபரை விமர்சனம் செய்தோர் 17 ஆண்டாக வெளியுலகத் தொடர்பின்றி வைக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் சுட்டினர்.

Top