Images
  • taliban
    (கோப்புப் படம்: AFP/Aamir Qureshi)

தலிபான் அமைப்புடன் அனைத்துலகச் சமூகம் தொடர்பில் இருக்கவேண்டும்: ஐக்கிய நாட்டு நிறுவனம்

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அமைப்புடன் அனைத்துலகச் சமூகம் தொடர்பில் இருக்கவேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் (Antonio Guterres) கேட்டுக்கொண்டுள்ளார்.

வன்முறையால் சிதைந்திருக்கும்
ஆப்கானிஸ்தானிற்கு ஆதரவளிக்க, 600 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையைத் திரட்ட அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

இதுவரை 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை நன்கொடையாகக் கொடுக்கப் பல நாடுகளும் உறுதிதெரிவித்துள்ளன.

நிதியுதவியைக் கொண்டு, அங்கு மனித உரிமைகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைத் தலிபான் அமைப்பிடம் எடுத்துக்கூறமுடியும் என்று தாம் நம்புவதாகத் திரு. குட்டெரஸ் சொன்னார்.  

Top