Images
  • UN talks with NK (1)
    (படம்: Reuters) 

கடன் தொகைகள் குறித்து வட கொரியாவுடன் ஐக்கிய நாட்டு நிறுவனம் பேச்சு

ஐக்கிய நாட்டு நிறுவனம் கடன் தொகைகள் குறித்து வட கொரியாவுடன் பேச்சு நடத்தி வருகிறது.

தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வங்கித் தடைகளே அதற்குக் காரணம் என்று பியோங்யாங் கூறியுள்ளது.

அது குறித்து பேச்சு நடத்த வட கொரியத் தூதர் ஜா சாங் நாம் (Ja Song Nam) ஐக்கிய நாட்டு நிர்வாகத்தின் தலைவரைச் சந்தித்துள்ளார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்குத் தான் கடன்பட்டிருக்கும் சுமார் நூற்று இருபத்தொன்றரை ஆயிரம் டாலரை வங்கிகளில் இருந்து மாற்றவிடமுடியவில்லை என்று பியோங்யாங் கூறுகிறது.

வட கொரியாவின் நிதி பரிமாற்றங்களைக் கையாளும் அதன் வெளிநாட்டு வர்த்தக வங்கிக்கு (Foreign Trade Bank) எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் தடைகள் விதிக்கப்பட்டதால் அந்நிலை ஏற்பட்டுள்ளதாக வட கொரியா கூறியது.

கடனைக் கட்டுவதற்கான வழிகளை வட கொரியாவுடன் இணைந்து காணவிருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியது.


 

Top