Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

UNESCO பட்டியலில் இடம்பெற்றுள்ள இடங்கள், கிருமிப்பரவலால் வெகுவாகப் பாதிக்கப்பட்டன: ஐக்கிய நாட்டு நிறுவனம்

ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல், கலாசார நிறுவனமான UNESCOவின் உலக மரபுடைமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இடங்கள் பயணக் கட்டுப்பாடுகளால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
UNESCO பட்டியலில் இடம்பெற்றுள்ள இடங்கள், கிருமிப்பரவலால் வெகுவாகப் பாதிக்கப்பட்டன: ஐக்கிய நாட்டு நிறுவனம்

கோப்புப் படம்: AFP / Yuri KADOBNOV

ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல், கலாசார நிறுவனமான UNESCOவின் உலக மரபுடைமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இடங்கள் பயணக் கட்டுப்பாடுகளால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், நோய்த்தொற்றுச் சூழலிலிருந்து வலுவாக மீண்டு வர அமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளது.

எனினும் பருவநிலை மாற்றம், நிதித் தட்டுப்பாடு போன்ற சவால்களையும் அமைப்பு எதிர்நோக்குகிறது.

1990ஆம் ஆண்டில் கிரெம்ளினும் செஞ்சதுக்கமும் ரஷ்யாவின் முதல் உலக மரபுடைமை இடமாக அறிவிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டில், மாஸ்கோவில் அதிகம் பேர் சென்ற இடமாகத் திகழ அந்த அங்கீகாரம் உதவியது.

சுமார் 3 மில்லியன் பேர் அங்கு சென்றனர்.

ஆனால், கொரோனா கிருமிப்பரவலால் நிலைமை மாறியது.

கடந்த 18 மாதங்களில், அங்குச் செல்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.

கிரெம்ளின் அருங்காட்சியகங்களில் முக்கிய மறுசீரமைப்புப் பணிகளுக்குத் தேவைப்படும் நிதியைத் திரட்ட அதிகாரிகள் திணறுகின்றனர்.

நோய்த்தொற்றுச் சூழலில் 90 விழுக்காடு வரையிலான இடங்கள் மூடப்பட்டதாக யுனெஸ்கோ தெரிவித்தது.

பருவநிலை மாற்றத்திலிருந்து மரபுடைமை இடங்களைப் பாதுகாக்க வேண்டும்.

ஆனால் அந்தப் பணியில் அரசாங்கங்களுக்குத் தேவையான நிதியை வழங்க உலக மரபுடைமைக் குழு சிரமப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்