Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Microsoft-நிறுவனத்தின் கணினிக் கட்டமைப்புக்குள் சீனா ஊடுருவியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

சீனா, Microsoft-நிறுவனத்தின் கணினிக் கட்டமைப்புக்குள் ஊடுருவியதாக, வாஷிங்டன், குற்றம் சுமத்தியுள்ளது. 

வாசிப்புநேரம் -

சீனா, Microsoft-நிறுவனத்தின் கணினிக் கட்டமைப்புக்குள் ஊடுருவியதாக, வாஷிங்டன், குற்றம் சுமத்தியுள்ளது.

அதன் தொடர்பில், சீனக் குடிமக்கள் நால்வர் மீது, அமெரிக்க நீதியமைச்சு முறையாகக் குற்றஞ்சாட்டி உள்ளது.

2011-க்கும் 2018-க்கும் இடைப்பட்ட காலத்தில்,
பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கணினிகளில், அந்த நால்வரும் அத்துமீறி ஊடுருவியதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டது.

ஊடுருவிகள், இவ்வாண்டு மார்ச் மாதம், மின்மடல் சேவையகமான Microsoft Exchange-ஐக் குறிவைத்ததாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) தெரிவித்தார்.

அது, அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்குக் கடும் மிரட்டலை விடுப்பதாக அவர் சொன்னார்.

நிதி ஆதாயத்திற்காகச் சீனா, அரசாங்க ஆதரவோடு இணையக் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

Microsoft-டில் நடந்த ஊடுருவல், அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், அரசாங்க அமைப்புகள் எனச் சுமார் 30,000 இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்