Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆகாயத் தாக்குதல் - சந்தேகத்தைக் கிளப்பும் New York Times

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் இறுதியாக நடத்திய ஆகாயத் தாக்குதல் பற்றி New York Times செய்தி நிறுவனம் சந்தேகம் எழுப்பியுள்ளது.

வாசிப்புநேரம் -
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆகாயத் தாக்குதல் - சந்தேகத்தைக் கிளப்பும் New York Times

(படம்: REUTERS/Stringer)

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் இறுதியாக நடத்திய ஆகாயத் தாக்குதல் பற்றி New York Times செய்தி நிறுவனம் சந்தேகம் எழுப்பியுள்ளது.

சென்ற மாதம், காபூல் விமான நிலையத்துக்கு வெளியே காரில் இருந்த தற்கொலையாளி, அமெரிக்கத் துருப்பினரைத் தாக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.

அதை முறியடிக்க ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு கூறியிருந்தது.

ஆனால், அந்தக் காரின் ஓட்டுநர் அமெரிக்க உதவி நிறுவனத்துக்காகப் பணியாற்றியவர் என்று New York Times தெரிவித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்