Images
  • nyc

அமெரிக்கா: 25 வயது கறுப்பின ஆடவர் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு

அமெரிக்காவில், 25 வயது கறுப்பின ஆடவரைத் துரத்திச் சென்று கொன்றதாகக் கூறப்படும் வெள்ளையினத்தவர் மூவர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு, அஹ்மத் ஆர்பரி (Ahmaud Arbery) என்ற அந்த ஆடவர், மெதுவோட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

மூவரில் ஒருவர் கைத்தொலைபேசி மூலம் அதைக் காணொளியாகப் பதிவுசெய்தார்.

இனச் சமத்துவத்துக்கான போராட்டத்தில் இன்னும் எவ்வளவு தூரம் செல்லவேண்டும் என்பதை அந்தத் துயரச் சம்பவம் நினைவூட்டுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார். 

Top