Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இரு தரப்பு உறவை மறுவுறுதிப்படுத்திய அமெரிக்க, தென் கொரிய வெளியுறவு அமைச்சர்கள்

அமெரிக்க, தென் கொரிய வெளியுறவு அமைச்சர்கள் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மறுவுறுதிப்படுத்தியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
இரு தரப்பு உறவை மறுவுறுதிப்படுத்திய அமெரிக்க, தென் கொரிய வெளியுறவு அமைச்சர்கள்

(படம்: REUTERS)

அமெரிக்க, தென் கொரிய வெளியுறவு அமைச்சர்கள் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மறுவுறுதிப்படுத்தியுள்ளனர்.

கொரியத் தீபகற்பத்தை அணுவாயுதமற்ற வட்டாரமாக்க ஜப்பானுடன் இணைந்து பணியாற்றவும் அவர்கள் இணங்கியுள்ளனர்.

G7 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பையொட்டி, அமெரிக்க, தென் கொரிய வெளியுறவு அமைச்சர்கள் கலந்து பேசினர்.

பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், வட கொரியா அணுவாயுத முயற்சிகளைக் கைவிடுவதன் தொடர்பில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது சுட்டப்பட்டுள்ளது.

பல தரப்பு ஒத்துழைப்பு, மியன்மாரை ஜனநாயகப் பாதைக்குத் திரும்பச் செய்வது உள்ளிட்ட வட்டாரப் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர்கள் கலந்துரையாடினர்.

-REUTERS 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்