Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சுதந்திரமான இந்தோ-பசிஃபிக் வட்டாரத்துக்கான அமெரிக்காவின் புதிய உத்தி

அமெரிக்கா, பரந்த இந்தோ-பசிஃபிக் வட்டாரத்துக்கான புதிய விரிவான உத்தியை வெளியிடவிருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
சுதந்திரமான இந்தோ-பசிஃபிக் வட்டாரத்துக்கான அமெரிக்காவின் புதிய உத்தி

(படம்: Reuters)

அமெரிக்கா, பரந்த இந்தோ-பசிஃபிக் வட்டாரத்துக்கான புதிய விரிவான உத்தியை வெளியிடவிருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) கூறியுள்ளார்.

ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்தை ஒட்டி நடைபெற்ற சந்திப்பில், ஆசியான் வெளியுறவு அமைச்சர்களிடம் அவர் அவ்வாறு சொன்னார்.

அந்த வட்டாரத்தை மேலும் சுதந்திரமான, திறந்த, பாதுகாப்பான ஒன்றாக மேம்படுத்தும் உத்தியாக அது அமைந்திருக்கும் என்றார் அவர்.

பலதரப்பும் கொண்டுள்ள இலக்கை அந்த உத்தி அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்றும் திரு. பிளிங்கன் சொன்னார்.

இந்தோ-பசிஃபிக் வட்டாரத்துக்கான தென்கிழக்காசியாவின் முக்கியத்துவத்தை அந்த உத்தி பிரதிபலிக்கும்.

அந்த வட்டாரத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில், ஆசியானுக்கு உள்ள முக்கியப் பங்கையும் அது எடுத்துக்காட்டும் எனக் கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்