Images
  • US chief China (1)
    (படம்: Reuters) 

தென் சீனக் கடல் விவகாரம்: சீனாவிற்கு 4 நாள் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கக் கடற்படைத் தலைவர்

அமெரிக்கக் கடற்படைத் தலைவர் அட்மிரல் ஜான் ரிச்சட்சன் (John Richardson), 4 நாள் பயணம் மேற்கொண்டு இன்று (ஜனவரி 13) சீனா செல்கிறார்.

பெய்ச்சிங்கில், சீனக் கடற்படைத் தலைவர் துணை-அட்மிரல் ஷென் ஜின்லோங்கை (Shen Jinlong), அவர் சந்தித்துப் பேசுவார்.

இது வழக்கமான சந்திப்பு என்று South China Morning Post நாளேடு தெரிவித்தது.

அமெரிக்காவும், சீனாவும் அவற்றுக்கிடையிலான கருத்து வேற்றுமைகளுக்குத் தீர்வுகாண முனைந்துள்ள வேளையில், பதற்றத்தைத் தணிக்க தங்கள் சந்திப்பு உதவக்கூடும் என்று அட்மிரல் ரிச்சட்சன் கூறினார்.

Nanjingஇல் அமைந்திருக்கும், சீனாவின் கிழக்குத் தளபத்தியத் தலைமையகத்துக்கும் அவர் செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில், படைகளை மறுஆய்வு செய்யவும் அட்மிரல் ரிச்சட்சனுக்குப் பெய்ச்சிங் அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"Rim of the Pacific" பயிற்சியில் மீண்டும் இணைந்துகொள்வது குறித்துச் சீனா அமெரிக்கக் கடற்படைத் தலைவரிடம் பேச்சுநடத்தும் என்று நம்பப்படுகிறது.


Top