Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் இரண்டே வாரங்களில் சுமார் 97,000 பிள்ளைகளுக்குக் கிருமித்தொற்று

அமெரிக்காவில் இரண்டே வாரங்களில் சுமார் 97,000 பிள்ளைகளுக்குக் கிருமித்தொற்று

வாசிப்புநேரம் -
அமெரிக்காவில் இரண்டே வாரங்களில் சுமார் 97,000 பிள்ளைகளுக்குக் கிருமித்தொற்று

படம்: AP Photo/Wilfredo Lee

அமெரிக்காவில் சென்ற மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் மட்டும் 97,000க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு COVID-19 நோய் தொற்றியது.

அந்தத் தகவலை, அமெரிக்கக் குழந்தை மருத்துவக் கழகம் தெரிவித்தது.

இரண்டே வாரங்களில் பிள்ளைகளிடையே நோய்த்தொற்றுச் சம்பவங்கள் சுமார் 40 விழுக்காடு அதிகரித்துள்ளதாகக் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

பிள்ளைகள் மீண்டும் பள்ளிக்குத் திரும்பிய காலக்கட்டத்தில், ஆய்வுக்கான விவரங்கள் திரட்டப்பட்டன.

பிள்ளைகளிடையே COVID-19 உண்டாக்கும் பாதிப்புகள் குறித்து மேலும் புரிந்துகொள்ளவும், நோய்ப்பரவலில் அவர்களின் பங்கு என்னவென்பதை அறிந்துகொள்ளவும், அந்த ஆய்வு நடத்தப்பட்டது.

நோய்த்தொற்றினால் சில பள்ளிகள் திறக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் சிலர் COVID-19 நோய் இளம் வயதினரைப் பெருமளவில் பாதிக்காதெனக் கூறிவருகின்றனர்.

அண்மை ஆய்வு முடிவு, அது தவறு என்பதை நிரூபித்துள்ளது.

பெரியவர்களைப் போலவே நோயைப் பரப்பும் தன்மை இளையர்களுக்கும் உண்டு என அந்த ஆய்வு தெரிவித்தது.

மே மாதத்திலிருந்து சுமார் 86 பிள்ளைகள் கிருமித்தொற்றால் மாண்டனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்