Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீன இறக்குமதிகளின் மீது அமெரிக்கா 200 பில்லியன் டாலர் மதிப்பு வரி

அமெரிக்கா, வரிகளுக்கு உட்படுத்தப்படவல்ல சீன இறக்குமதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சீன இறக்குமதிகளின் மீது அமெரிக்கா 200 பில்லியன் டாலர் மதிப்பு வரி

(படம்: REUTERS/Jason Lee/File Photo)

அமெரிக்கா, சீன இறக்குமதிகளின் மீது மேலும் அதிகமான வரிகளை விதிக்க எண்ணம் கொண்டுள்ளது. உலகின் ஆகப் பெரிய பொருளியல்களான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளதை அது புலப்படுத்துகிறது.

அண்மையில், அமெரிக்கா, வரிகள் விதிக்கப்படக்கூடிய சீன இறக்குமதிகளின் பட்டியலை வெளியிட்டது. 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள அந்த இறக்குமதிகள் மீதான வரி, செப்டம்பர் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம், 34 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா 25 விழுக்காடு வரி விதித்தது. அதற்குச் சீனாவும் பதிலடி கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து பதிலடி கொடுக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தெரிவித்துள்ளார்.

500 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடைய சீன இறக்குமதிகளின் மீது வரிகள் விதிக்கப்படலாம் என்று திரு. டிரம்ப் கூறியுள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்