Images
  • us china (1)
    (படம்:AFP/Mandel Ngan)

'சீனாவுடன் பனிப்போரைத் தொடரவில்லை' : அமெரிக்கா

அமெரிக்காவும், சீனாவும் பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பில் இணைந்து செயல்பட இணங்கியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளபோதும் அவை பொது அம்சங்களில் ஒன்றுபட்டுச் செயல்பட முடிவெடுத்துள்ளன.

சீனாவுடன் பனிப்போரைத் தொடரவில்லை என்று கூறிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ, சீனாவுக்கான கொள்கைகளையும் அமெரிக்கா கட்டுப்படுத்தவில்லை என்றார்.

தென் சீனக் கடல் பகுதியில் சீனா தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திய அமெரிக்கா, அந்த வட்டாரத்தில் தனது சுற்றுக்காவலையும் தொடர்கிறது.

சீனாவின் அரசுரிமைக்குட்பட்ட தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கா தனது அத்துமீறலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் யாங் ஜெய்ச்சி கேட்டுக்கொண்டார்.

அமெரிக்காவுடனான வர்த்தகப் பூசலுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான அரசதந்திர முயற்சிகளும் தொடர்கின்றன.
 

Top