Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவும் சீனாவும் வர்த்தக உடன்பாட்டில் கணிசமான முன்னேற்றம் : சீனத் துணைப் பிரதமர்

அமெரிக்காவும் சீனாவும், தங்களுக்கு இடையிலான வர்த்தக உடன்பாட்டில் ஒரு பகுதியை எட்டும் பேச்சு வார்த்தையில், கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளதாகச் சீனத் துணைப் பிரதமர் லீயூ ஹே (Liu He) கூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -
அமெரிக்காவும் சீனாவும் வர்த்தக உடன்பாட்டில் கணிசமான முன்னேற்றம் : சீனத் துணைப் பிரதமர்

(கோப்புப் படம்: AFP/Fred Dufour)

அமெரிக்காவும் சீனாவும், தங்களுக்கு இடையிலான வர்த்தக உடன்பாட்டில் ஒரு பகுதியை எட்டும் பேச்சு வார்த்தையில், கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளதாகச் சீனத் துணைப் பிரதமர் லீயூ ஹே (Liu He) கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போரை நிறுத்துவது உலக நலனுக்குச் சிறந்தது என்றும் அவர் கூறினார்.

சமத்துவம், இருதரப்பு மரியாதை-ஆகியவற்றின் அடிப்படையில், இருதரப்பும் பணியாற்றிவருவதாக அவர் சொன்னார்.

அதே வேளையில் அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் (Mike Pence) இருதரப்பு பிரச்சினையைப் பற்றி தமது கருத்துகளையும் முன்வைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதம் சில்லியில் நடைபெறவிருக்கும் APEC உச்சநிலை சந்திப்புகளுக்குள் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பு (Donald Trump) நேற்றுக் கூறியிருந்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்