Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டில் மீண்டும் இணையும் அமெரிக்கா

அமெரிக்கா பாரிஸ் பருவநிலை உடன்பாட்டில் அதிகாரபூர்வமாக மீண்டும் இணைந்துகொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
பாரிஸ் பருவநிலை உடன்பாட்டில் மீண்டும் இணையும் அமெரிக்கா

(படம்: Reuters/Natalie Thomas)

அமெரிக்கா பாரிஸ் பருவநிலை உடன்பாட்டில் அதிகாரபூர்வமாக மீண்டும் இணைந்துகொண்டுள்ளது.

அடுத்த 30 ஆண்டில் கரியமில வாயு வெளியேற்றத்தை அதிகமாகக் குறைக்கும் நடவடிக்கைகளைத் திட்டமிடுதலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

உடன்பாட்டில் அமெரிக்கா மீண்டும் சேர்ந்துகொள்ள எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது என்று விஞ்ஞானிகளும் வெளிநாட்டு அரசதந்திரிகளும் கூறுகின்றனர்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கடும் விளைவுகளைத் தடுக்கும் நோக்கில் 2015ஆம் ஆண்டு அந்த உடன்பாடு செய்துகொள்ளப்பட்டது.

அதன்பிறகு, சுமார் 200 நாடுகள் அதில் கையெழுத்திட்டன.

அமெரிக்கா மட்டும் அதிலிருந்து விலகியது.

அதற்கு, அதிகச் செலவுகளைக் காரணங்காட்டியிருந்தார் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்