Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் புதிய கட்ட நோய்ப்பரவல் தவறாகக் கையாளப்படுகிறது - மூத்த நோய்த்தொற்று நிபுணர்

அமெரிக்காவில் மீண்டும் தலைதூக்கியுள்ள நோய்ப்பரவல் தவறாகக் கையாளப்படுவதாக, அந்நாட்டின் மூத்த நோய்த்தொற்று நிபுணர்  ஆன்ட்டனி ஃபௌச்சி (Anthony Fauci) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

அமெரிக்காவில் மீண்டும் தலைதூக்கியுள்ள நோய்ப்பரவல் தவறாகக் கையாளப்படுவதாக, அந்நாட்டின் மூத்த நோய்த்தொற்று நிபுணர் ஆன்ட்டனி ஃபௌச்சி (Anthony Fauci) கூறியுள்ளார்.

தடுப்பூசி போடாத அமெரிக்கர்களிடையே நோய்ப்பரவல் சம்பவங்கள் அதிகரித்துவரும் வேளையில் அவர் தமது கருத்துகளைத் தெரிவித்தார்.

அமெரிக்காவில் இன்னும் பாதிப் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதை டாக்டர் ஃபௌச்சி சுட்டினார்.

அதனால், தினசரி கிருமித்தொற்றுக்குப் பலியாவோர் எண்ணிக்கை நாலாயிரத்தைத் தாண்டலாம் என்று அவர் கூறினார்.

குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள், இரண்டாவது முறையாகத் தடுப்பூசி போட வேண்டும் என்றார் அவர்.

எளிதில் தொற்றக்கூடிய டெல்ட்டா வகை கிருமியால், ஏற்கனவே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் முகக்கவசம் அணிவது குறித்து அமெரிக்கா பரிசீலித்துவருவதாக டாக்டர் ஃபௌச்சி தெரிவித்தார்.

அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.

நாள் ஒன்றுக்குச் சராசரியாக 47,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்