Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

புதிய Omicron கிருமித்தொற்றை முறியடிக்கும் திட்டங்களை வகுத்துள்ளார் அமெரிக்க அதிபர் பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒமக்ரான் கிருமிப்பரவலை முறியடிப்பதற்கான திட்டங்களை வகுத்துள்னார்.  

வாசிப்புநேரம் -
புதிய Omicron கிருமித்தொற்றை முறியடிக்கும் திட்டங்களை வகுத்துள்ளார் அமெரிக்க அதிபர் பைடன்

(படம்:AFP / Kena Betancur)

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒமக்ரான் கிருமிப்பரவலை முறியடிப்பதற்கான திட்டங்களை வகுத்துள்னார்.

குளிர்காலத்தில் கிருமிப்பரவல் அதிகரிப்பதைத் தடுக்க அவர் முனைகிறார்.

முடக்கமோ பணி நிறுத்தமோ அறிவிக்கப்படாது என்று திரு. பைடன் உறுதியளித்தார். தடுப்பூசி போடும் பணிகளும் பரிசோதனைகளும் துரிதப்படுத்தப்படும் என்றார் அவர்.

அமெரிக்கா செல்லும் அனைத்துலகப் பயணிகள் புறப்படுவதற்கு முதல் நாள் கிருமித்தொற்று இல்லை என்ற சான்றைப் பெற்றிருக்க வேண்டும்.

தடுப்பூசி போட்டிருந்தாலும் இல்லையென்றாலும் குடிமக்கள், வெளிநாட்டவர் அனைவருக்கும் அது பொருந்தும்.

அன்றாட வாழ்வைப் பாதிக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதில்லை என்று திரு. பைடன் கூறினார். உள்ளரங்குகளிலும் பொது இடங்களிலும் மக்கள் முகக் கவசம் அணிந்துகொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அமெரிக்காவில் மூவருக்கு ஒமக்ரான் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது. முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர்களிடம் இலேசான அறிகுறிகளே தென்பட்டன.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்