Images
  • us
    படம்: REUTERS

அமெரிக்கா செல்லும் அனைத்துப் பயணிகளும் COVID-19 பரிசோதனைகள் செய்திருக்கவேண்டும்

அமெரிக்காவிற்குச் செல்லும் பயணிகள் இனி
COVID-19 பரிசோதனைகள் செய்திருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் நுழையும்போது பயணிகள் தங்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்ற சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

புதிய நடவடிக்கை இன்னும் 2 வாரங்களில் தொடங்கும்.

பிரிட்டனிலிருந்து வரும் பயணிகள் நோய்த்தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும் என்று கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டிருந்து.

அந்த நடைமுறையை இனி எல்லா நாட்டுப் பயணிகளும் பின்பற்றவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நடவடிக்கை அமெரிக்கர்களுக்கும் பொருந்தும்.

COVID-19 நோய்த்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா.

அங்கு 22 மில்லியனுக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். 375,000 மேற்பட்டோர் மாண்டனர்.

பயணிகள் முன்கூட்டியே பரிசோதனை செய்து கொண்டால் அவர்களால் ஏற்படும் உள்நாட்டு நோய்ப்பரவலை கட்டுக்குள் வைக்கமுடியும் என்று அமெரிக்கா தெரிவித்தது.  

Top