Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க மாநிலங்களில் அறிவிக்கப்பட்டிருக்கும் நடமாட்டத் தடை தளர்த்தப்படலாம்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், COVID-19 கிருமித்தொற்று காரணமாக நாட்டின் சில மாநிலங்களில் அறிவிக்கப்பட்டிருக்கும் நடமாட்டத் தடை தளர்த்தப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
அமெரிக்க மாநிலங்களில் அறிவிக்கப்பட்டிருக்கும் நடமாட்டத் தடை தளர்த்தப்படலாம்

படம்: Justin Sullivan/Getty Images/AFP

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், COVID-19 கிருமித்தொற்று காரணமாக நாட்டின் சில மாநிலங்களில் அறிவிக்கப்பட்டிருக்கும் நடமாட்டத் தடை தளர்த்தப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நீடித்த பொருளியல் பாதிப்பைத் தவிர்க்கத் திரு. டிரம்ப் விரும்புவதாய் நம்பப்படுகிறது.

கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தும்பொருட்டு மூடப்பட்ட தொழில்கள் கூடிய விரைவில் திறக்கப்படும் என செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

அமெரிக்காவின் சில மாநிலங்களில் நடப்பிலுள்ள 15 நாள் நடமாட்டத் தடை அடுத்தவாரத் தொடக்கத்தில் முடிவுக்கு வரவுள்ளது.

அந்தத் தடையை நீட்டிக்கவேண்டாம் என்று முடிவு செய்யப்படலாம் என அதிபர் டிரம்ப் கோடிகாட்டியுள்ளார்.

அந்த முடிவை எடுக்கும் பொறுப்பை மாநில அளுநர்களிடம் ஒப்படைத்திருப்பதாய் அவர் சொன்னார்.

நாடு முழுவதும் கோவிட்-19 கிருமிப்பரவல் அதிகரித்துள்ள நிலையில், கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் எனச் சுகாதார அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.

நாடு முழுவதையும் முடக்கும்படி நியூயார்க் மாநில ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, தனிநபர் சுகாதாரப் பாதுகாப்புப் பொருள்களை அதிகமாக வாங்கிச் சேகரிப்பதை ஒரு குற்றமாக அறிவிக்கும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அத்தகைய பொருள்களை வாங்கிக் குவிப்போரையும்,அதிக விலைக்கு விற்பனை செய்வோரையும் கண்டறியும் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்