Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 : அமெரிக்காவில் மாண்டோர் எண்ணிக்கை 100,000ஐக் கடந்தது

அமெரிக்காவில் COVID-19 நோயால் மாண்டோர் எண்ணிக்கை 100,000ஐக் கடந்துள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19 : அமெரிக்காவில் மாண்டோர் எண்ணிக்கை 100,000ஐக் கடந்தது

படம்: AP Photo/Wilfredo Lee

அமெரிக்காவில் COVID-19 நோயால் மாண்டோர் எண்ணிக்கை 100,000ஐக் கடந்துள்ளது.

இவ்வாறு நேரும் என்று 4 மாதங்களுக்கு முன் யாரும் எதிர்பார்க்கவில்லை.

Johns Hopkins பல்கலைக்கழகத்தின் கணக்குப்படி மரண எண்ணிக்கை 100,418-க்கு உயர்ந்துள்ளது. சுமார் 1.69 மில்லியன் மக்கள் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க மக்களவை நாயகர் நேன்சி பெலோசி (Nancy Pelosi) செய்தியாளர் கூட்டம் ஒன்றின் நடுவே நிலைகுலைந்த பொருளியல் மெல்லத் திறக்கப்படும் வேளையில், "மோசமான கிருமித்தொற்று" ஏற்படுத்திய மரணங்கள் குறித்துப் பேசினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் திரு. ஜோ பைடன், மாண்டோரின் குடும்பத்தாருக்குத் தம் இரங்கலைத் தெரிவித்தார்.

உலக அளவில் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருந்துவரும் வேளையில் அதிபர் டிரம்ப்புக்கு எதிரான குறைகூறல்கள் அதிகரித்து வருகின்றன. மருத்துவப் பரிந்துரைகளை எதிர்த்து முகக் கவசங்களை அணிய மறுத்து வருகிறார் அவர்.

அமெரிக்கப் பொருளியலை உடனடியாக மீட்கும் விதத்தில், முடக்கக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த மாநில, உள்ளூர்த் தலைவர்களை நெருக்கி வருகிறார் திரு. டிரம்ப். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்