Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: பயணத்தைத் தவிர்ப்பதற்கான ஆலோசனைப் பட்டியலில் மேலும் 116 நாடுகள்

பயணத்தைத் தவிர்ப்பதற்கான ஆலோசனைப் பட்டியலில், அமெரிக்க வெளியுறவு அமைச்சு மேலும் 116 நாடுகளைச் சேர்த்துள்ளது.

வாசிப்புநேரம் -

பயணத்தைத் தவிர்ப்பதற்கான ஆலோசனைப் பட்டியலில், அமெரிக்க வெளியுறவு அமைச்சு மேலும் 116 நாடுகளைச் சேர்த்துள்ளது.

"நான்காம் கட்டம்: பயணம் செய்ய வேண்டாம்" என்ற ஆலோசனைப் பட்டியலில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இஸ்ரேல், மெக்சிகோ, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

COVID-19 சம்பவங்கள் அங்கு அதிகமாக உள்ளதாகக் கூறப்பட்டது.

சுமார் 80 விழுக்காட்டு உலக நாடுகள் ஆக உயர்நிலை ஆலோசனைப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமைக்கு முன்பு, சுமார் 200 நாடுகளில் 34 நாடுகள், பயணத்தைத் தவிர்ப்பதற்கான பட்டியலில் சேர்க்கப்பட்டன.

தற்போது 150 நாடுகள் அதில் இடம்பெற்றுள்ளன.

சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கான பயணங்களை மறுபரிசீலனை செய்யும்படி ஆலோசனை கூறப்பட்டது.


- REUTERS 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்