Images
  • US e-scooter (1)
    (படம்: Mario Tama/AFP)

அமெரிக்கா: மின் ஸ்கூட்டர் தொடர்பான விபத்தில் சென்ற ஆண்டு 1500க்கும் அதிகமானோர் காயம்

அமெரிக்காவில், சென்ற ஆண்டு மின் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்திய 1500க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை அறிக்கைகளையும் நெருக்கடிகால அதிகாரிகளையும் மேற்கோள் காட்டி, பயனீட்டாளர் சஞ்சிகை ஒன்று அந்தத் தகவலைத் தெரிவித்தது.

இருப்பினும் தனது புள்ளிவிவரம் முழுமையானது அல்ல என்றும், மின் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்று நால்வர் மாண்டது சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்றும் அந்த சஞ்சிகை குறிப்பிட்டது.

2017ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து, மின் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்தும் போக்கு அமெரிக்காவில் அதிகரிக்கத் தொடங்கியது.

குறுகிய தொலைவைக் கடந்துசெல்ல மின் ஸ்கூட்டர்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் போக்கு, நகர்ப்புறப் போக்குவரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சாலைகளிலும் நடைபாதைகளிலும் மின் ஸ்கூட்டர்களை ஓட்டிச் செல்வதால் ஏற்படக்கூடிய உத்தேச ஆபத்துகள் குறித்து அமெரிக்க ஊடகங்கள் அவ்வப்போது எச்சரித்து வருகின்றன.

பெரிய மின் ஸ்கூட்டர் நிறுவனங்கள், அவற்றின் வாடிக்கையாளர்களைத் தலைக்-கவசம் அணிந்துகொள்ள ஊக்குவித்து வருகின்றன.

ஆனால், அதைக் கட்டாயமாக்கும் விதிமுறை ஏதும் தற்போது நடப்பில் இல்லை. 

Top