Images
  • american airlines (1)
    (படம்: Reuters)

இந்தியா, பாக்கிஸ்தானுக்காக பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது அமெரிக்கா

இந்தியாவுக்கும், பாக்கிஸ்தானுக்குமான பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது.

மூன்றாம் நிலைப் பயண எச்சரிக்கையின்படி, இந்தியாவுக்கோ, பாக்கிஸ்தானுக்கோ செல்லவிருப்போர் தங்கள் பயணத் திட்டத்தை மறுபரிசீலனை செய்துகொள்ளலாம்.

முன்னர், அவ்விரு நாடுகளுக்கும் பயணம் செய்யக்கூடாது எனும் நான்காம் நிலைப் பயண எச்சரிக்கையை விடுத்திருந்தது அமெரிக்கா.

இந்தியாவில் இரண்டாம் கட்ட நோய்ப்பரவல் தற்போது தணியத் தொடங்கியுள்ளது.

அங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 4 மாதம் இல்லாத அளவு குறைந்துள்ளது.

இருப்பினும், கடந்த 14 நாளில் இந்தியாவிற்குப் பயணம் செய்த வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி இல்லை.  

Top